பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்15



அறத்துப்பால் இல்லற இயல் 15 8. அன்புடைமை (மக்கள் பிறவிக்கு இருக்க வேண்டிய அன்பு சிறப்பாக 4 5 விளக்கப்படுகிறது) . அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். 71 அன்பிற்கு அடைத்து வைக்கப்படுகின்ற தாழ்ப்பாள் இல்லை. அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்பினைப் பெற்றவரது துன்பத்தினைக் கண்ட் போதே வெளிப்படுகின்ற கண்ணிரே அன்புடையவரது உள் நின்ற அன்பினை எல்லோரும் அறியுமாறு காட்டிவிடும். . அன்பிலார் எல்லாம் தமக்கு.உரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 72 அன்பில்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாமையால் எல்லாப் பொருள்களாலும் தமக்கே .ரியவர்கள் ஆவார்கள். அன்பு டையவர்கள் தம்முடைய எலும்பினாலும் பிறர்க்கு உரியர் ஆவார்கள். . அன்போடு இயைந்த வழக்கென்ட ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. 73 பெறுதற்கரிய மக்களுயிர்க்கு எலும்புடைய உடம்போடு பொருந்திய தொடர்பினை, அன்புடனே பொருந்துவதற்கு வந்த வழியினாலாகிய பயனாகும் என்று அறிந்தோர் கூறுவர். அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 74 அன்பு என்பது பிறரிடத்தில் செல்லும் ஆர்வம் என்னும் விருப்பத்தின்ை உண்டாக்கும். ஆர்வம் என்னும் அந்த விருப்பம் நட்பு என்று சொல்லப்படுகின்ற அளவு கடந்த சிறப்பினைக் கொடுக்கும். அன்புற்று அமர்ந்த வழக்கென்ய வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75 இவ்வுலகில் இல்லறத்தில் இன்பமடைந்து பெறுகின்ற பெரு மையினை, அன்பினைப் பெற்றவராகிப் பொருந்திய வழியி னாலான பயனேயாகும் என்று அறிந்தோர் கூறுவார்கள்.