பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

16



திருக்குறளார் தெளிவுரை I6 10. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. 76 அறியாமையில் உள்ளவர்கள் அறத்திற்குத்தான் அன்பு துணையென்று கூறுவர். மறத்தினை (தீ நெறியினை) நீக்குதற் கும் அந்த அன்.ே துணையாகும். . என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். 77 எலும்பு இல்லாத உயிரினங்களை வெயிலானது சுடுவது போல, அன்பில்லாத உயிர்களை அறம் கொடுமைப்படுத்தித் தண்டிக்கும். . அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. 78 மனத்தில் அன்பில்லாதவரது உயிர்வாழ்க்கை வலிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும். . புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்? யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு 79 மனத்தின் உறுப்பாகிய அன்பில்லாதவர்களுக்கு மற்றைப் புறத்திலே இருக்கும் உறுப்புக்கள் எல்லாம் அறம் செய்தற்கு என்ன உதவியினைச் செய்யும்? அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. 80 அன்பினைக் கொண்டு அதன் வழியில் நிற்பதே உயிர் இருக்கும் உடம்பாகும். மற்ற அன்பில்லாத ..ம்புகள் ாலும்பினைத் தோலினாலே போர்த்திக் கொண்டிருப்பனவா கும். உயிர் நின்றன ஆகா.