பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்25



ו \יו . அறத்துப்பால் இல்லற இயல் 25 g 13. அடக்கம் உடைமை (மனம், மொழி, மெய் ஆகியவற்றைத் தி நெறியில் செல்லவொட்டாமல்தடுத்து அடக்கத்துடன் இருத்தல்) 1 அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆர்.இருள் உய்த்து விடும். 121 அடக்கமாகிய அறம் ஒருவனை அமரர்கள் உலகில் கொண்டு செலுத்தும். அடக்கமில்லாத தீய குணம் பொறுத்தற்கரிய (இருண்ட) துன்ட உலகில் செலுத்தும். . காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு. 122 அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காத்தல் வேண்டும். ஏனெனில், மக்களுயிர்க்குச் செல்வப் பெருக்கமானது அதனைவிடப் பிறிது யாதும் இல்லை. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின், 1.23 அடங்குதல் தமக்கு அறிவான செயல் என்று அறிந்துகொண்டு நன்மையான வழியில் அடங்கி இருப்பானேயானால் அந்த அடக்கமானது நல்லோரால் அறிந்துணரப்பட்டு அவனுக்குப் பெருஞ் சிறப்பினைக் கொடுக்கும். நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. #24 தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடங்கியவனுடைய உயர்ச்சியானது மலையின் உயர்ச்சியினைவிட மிகவும் பெரியதாகும். . எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. 4.25 பணிந்து அடங்கி வாழ்தல் எல்லோருக்கும் நல்லதாகும். அவர்களுக்குள்ளும் செல்வர்களுக்குப் பணிவு இருந்து விட்டால், வேறொரு செல்வம் சேர்ந்தது போன்ற சிறப்பினையுடையதாகும்.