பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

26



திருக்குறளார் தெளிவுரை 26 6, 10. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. 128 ஒரு பிறப்பில் ஆமையினைப் போல மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கி வாழும் வல்லமை பெற்றிருந்தால் அவ்வல்லமை எழுகின்ற பிறவிகளில் எல்லாம் பாதுகாப்பு உடையதாகும். யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 1.27 காக்கப்பட Gaلair quل எல்லாவற்றையும் காப்பாற்றாவிட்டாலும் நாவொன்றினை மட்டுமாவது காப்பாற்றுதல் வேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொற்குற்றத்திலே அகப்பட்டுத் தாமே துன்புறுவர். . ஒன்றானும் தீச்சொல் பொருட்டியன் உண்டாயின் நன்றாகாது ஆகி விடும். 128 தீய சொற்களினுடைய தன்மைகளால் பிறருக்கு வருகின்ற துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டாகிவிட்டால் அவனுக்குப் பிற நன்மைகளினால் உண்டான பயனும் தீயதாய் ஆகிவிடும். தீயினால் சுட்டபுண் உள்.ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு, 129 ஒருவன் ஒருவனை நெருப்பினால் சுட்டு அதனால் உண்டான புண் உடம்பில் காணப்பட்டாலும் மனத்தில் ஆறிவிடும். நாவினால் சுட்ட வடுவானது ஆறாது எப்போதும் இருக்கும். கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130 கோபத்தினை அடக்கிக் காத்துக் கல்வி பெற்றவனாகி அடங்கி இருப்பதில் ஆற்றல் உள்ளவனாக இருப்பவனது காலத்தினை, அறமானது அவனை அடையும் வழியிலே புகுந்து, பார்த்து இருக்கும். -