பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்27



அறத்துப்பால் இல்லற இயல் 27 14. ஒழுக்கம் உடைமை (மக்களுக்குரிய ஒழுக்கத்தில் நின்று வாழவேண்டிய முறைகளைக் கூறுதல்) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 1 31 ஒழுக்கம் எல்லோருக்கும் பெருஞ் சிறப்பினைத் தருதலால் அவ்வொழுக்கம் உயிரினையும் விட மேம்பட்டதாகப் பாதுகாக்கப்படும். பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துண்ை. 132 ஒழுக்கத்தினை அழிவு வராமல் போற்றி வருந்தியும் கூடக் காத்தல் வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து தேர்ந்து தெரிந்து கொண்டாலும், துணையாக இருப்பது அந்த ஒழுக்கம் ஒன்றேயாகும். : ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 器 ந்த பிறப்பாய் விடும். 133 ஒழுக்கமுள்ளவனாக இருத்தல் என்பது நற்குடியிற் பிறந்துள்ளவன் என்பதற்கு அடையாளமாகும். அவ்வொழுக்கத்திலிருந்து தவறுதல் தாழ்ந்த இழிதொழில் பிறவியானவன் என்பதாக்கிவிடும். மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். 134 கற்ற வேதத்தினை மறந்துவிட்டான் என்றாலும் திரும்பவும் ஒதிக் கொள்ளலாகும். பார்ப்பான் மக்கட் பிறப்புக்குரிய ஒழுக்கத்திலிருந்து குறைந்து விடுவானேயானால் கெட்டுவிடுவான். அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. 135 பொறாமை உள்ளவனிடத்தில் செல்வப் பெருக்கம் இல்லாததுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி என்பது இல்லாததாகிவிடும்.