பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

28



திருக்குறளார் தெளிவுரை 6, 1O. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து. 136 ஒழுக்கம் கெட்டுவிடுவதால் இழிகுலமாகும் என்பதாக வருகின்ற குற்றத்தினைத் தெரிந்த மன வலிமை கொண்ட பெரியோர்கள் ஒழுக்கத்திலிருந்து குறைந்துவிட மாட்டார்கள். - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. 137 எல்லோரும் ஒழுக்கத்தினால் மேம்பாட்டினை அடைவார்கள். ஒழுக்கத்திலிருந்து தவறுவதனால் அடைந்து விடக் கூடாத பழியினை அடையப் பெறுவர். . நன்றிக்கு வித்தாகும் நல்ஒழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். 138 நல்லொழுக்கம் என்பது நன்மையான அறத்திற்கு விதைபோன்ற காரணமாகும். தீய ஒழுக்கமானது எப்போதும் துன்பத்தினைத் தருவதாகும். ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். 歌 139 நல்லொழுக்கமுள்ள பெரியவர்களுக்கு மறந்துங்கூடத் தீமை தரும் சொற்களைச் சொல்லுவதென்பது முடியாததாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். 140 உலக மக்களோடு பொருந்துமாறு நடந்துகொள்ள வேண்டியதைக் கல்லாதவர்கள் LJC) நூல்களைக் ற்றிருந்தாலும் அறிவில்லாதவர்களே யாவார்கள்.