பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்35



அறத்துப்பால் இல்லற இயல் 35 18. வெஃகாமை (பிறருடைய பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ள நினையாதிருத்தல்) 1. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். 171 நடுவு நிலைமையில் இல்லாமல் பிறர்க்குரிய பொருளை வஞ்சித்துக் கொள்ள எண்ணினால் அந்த இச்சை அவனுடைய குடியைக் கெடுத்துக் குற்றத்தினையும் அப்போதே கொடுக்கும். 2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவுஅன்மை நாணு பவர். 172 நடுவு நிலைமை இல்லாதிருப்பதற்கு அஞ்சுபவர்கள் பின்னர் வரும் பயனை விரும்பிப் பழிக்கு ஆளாகக் கூடிய செயல்களைச் செய்ய மாட்டார்கள். 3. சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். 173 அறத்தான் வரக்கூடிய நிலையான இன்பத்தினை விரும்புகிறவர்கள் பிறருடைய பொருளை வஞ்சித்து அடையும் சிறிய இன்பத்திற்கு ஆசைப்பட்டுத் தீய செயல்களைச் செய்யமாட்டார்கள். 4. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மைஇல் காட்சி யவர். 174 ஐம்புலன்களையும் வென்று குற்றம் இல்லாத அறிவினையு டைய பெரியோர்கள் "யாம் வறுமை யுற்றோம்' என்று கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கமாட் டார்கள். 5. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். i.75 பொருளை விரும்பி யாவரிடத்தும் அறத்துடன் பொருந்தாத செயல்களை அறிவுடையோர் செய்வாராயின், நுணுக்கமான பல நூல்களிலும் சென்ற அவர்களுடைய அறிவு என்ன பயன் உடையதாகும்?