பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்37



அறத்துப்பால் இல்லற இயல் 37 19. புறங்கூறாமை (காணாதபோது பிறரை ് பேசாமை) 1. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது. 181 ஒருவன் அறத்தினைச் செய்யாமல் தீயவற்றைச் செய்தாலும் கூடப் 'புறங்கூறாதவன்' என்று மக்களால் சொல்லப்படுதல் நல்லதாகும். 2. அறன்.அழிஇ அல்லவை செய்தலின் தீதே புறன்.அழிஇப் பொய்த்து நகை. 182 ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகச் சிரித்துப் பேசுதல் என்பது, அறம் இல்லையென அழித்துப் பேசி தீமைகளைச் செய்வதைவிடத் தீமையானதாகும். 3. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும், i83 புறம் பேசிப் பொய்ம்மையான வாழ்க்கையில் வாழ்வதைவிட அது செய்யாமல் இறந்துவிடுதல், அறநூல்களில் சொல்லப்படுகின்ற நற்பயனை அவனுக்குத் தருவதாகும். 4. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். 184 ஒருவனுக்கு முன்பாக நின்று தாட்சண்யமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக முன்னே இல்லாதபோது பின்னால் தனக்கு வரும் தீமையினைக் கருதாத சொற்களைச் சொல்லாது இருப்பாயாக. 5. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும். 185 அறம் நல்லதென்று வாயினால் பேசுகின்றவனுடைய மனத்தில் அறத் தன்மை இல்லாதிருப்பதை அவன் புறங்கூறுவதற்குக் காரணமான புன்மைத்தன்மையினால் கண்டுகொள்ளப்படும்,