பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

42



திருக்குறளார் தெளிவுரை 43 6. 7. 10. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். 208 தமக்குட் பின்பு துன்பங்கள் வந்து வருத்த வேண்டாமென்று நினைப்பவர்கள், பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பார்களாக, எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வியாது பின்சென்று அடும். 2O7 எவ்வளவு பெரிய பகையுடையவர்களும் ஒருவாற்றால் ஒருகால் தப்பிவிடுவர். ஆனால், தீச் செயலாகிய பகை நீங்காமல் பின்னேயே போய்க் கொல்லும் தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வியாது அடிஉறைந் தற்று. 208 பிறர்க்குத் தீங்கு செய்பவர்கள் தப்பாமல் கெடுவது எப்படியென்றால், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் அடியிலேயே தங்குவது போன்ற தன்மையாகும். தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும் துன்னற்க தீவினைப் பால். 209 ஒருவன் தன்னைத்தானே விரும்புவானானால் சிறிதளவும் பிறனுக்குத் தீச்செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக. அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித் தீவினை செய்யான் எனின், 210 ஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச்செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பாளானால் அவள் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.