பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்55



அறத்துப்பால் துறவற இயல் 55 28. கூடாவொழுக்கம் (தவத்தோடு பொருந்தாத சிற்றின்ப இச்சையால் தீமை புரிதலாம்) வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 271 வஞ்சனை பொருந்திய மனத்தினை உடையவனது மறைவான தீய ஒழுக்கத்தினைக் கண்டு அவனோடு கலந்து நிற்கின்ற ஐந்து பூதங்களும் தம்முள்ளே நகைக்கும். . வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்.அறி குற்றப் படின். 272 தான் குற்றம் என்று அறிந்த அதனைச் செய்யத் தனது நெஞ்சம் போய்த் தாழ்ந்து விடுமானால், வானம் அளவு உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்? வலிஇல் நிலைமையாள் வல்உருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 273 மனவலிமை இல்லாதவர்கள் வலிமையுடையார் போலத் தவ வேடங் கொண்டு ஒழுக்கக் கேட்டினைச் செய்தல் எப்படிப்பட்டதென்றால், பசுவானது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு அயலானது பயிரை மேய்ந்தது போன்றதாகும். தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274 மனவலிமை இல்லாதவன் தவவேடத்தில் மறைந்து கொண்டு தவத்திற்குப் புறம்பானவற்றைச் செய்தல், வேட்டுவன் புதரிலே மறைந்து கொண்டு. பறவைகளைப் பிணித்தது போன்றதாகும். பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுளற்று என்று ஏதம் பலவும் தரும். 275 ‘யாம் ஆசைகளை விட்டோம் என்று சொல்லுபவர்களது மறைவான தீய ஒழுக்கம் பின்பு ஏன் செய்தோம்', 'ஏன் செய்தோம் என்று தாமே வருந்துமாறு அவர்கட்குப் பல துன்பங்களையும் தந்துவிடும்.