பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

56



திருக்குறளார் தெளிவுரை 56 8. நெஞ்சின் துறவர் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வரரின் வன்கனார் இல், 276 மனத்தில் ஆசைகள் நீங்காமல் வைத்துக்கொண்டு ஆசை இல்லாதவர்கள் போல வஞ்சித்து வாழ்கின்ற கொடிய தன்மை யுடையவர்களைப் போலக் கொடியவர்கள் உலகில் இல்லை. 7. புறம்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. 277 குன்றிமணியின் புறத்தில் காணப்படும் நிறம்போல வேடத்தில் செம்மையுடையவர்களாகக் காணப்பட்டாலும், அக்குன்றிமணியின் மூக்கினைப் போல மனம் இருண்டு இருப்பவரை உடையது இவ்வுலகம். 8. மனத்தது மாசு ஆக மாண்டார்நீர் ஆடி மறைந்துஒழுகும் மாந்தர் பலர். 278 அழுக்காகிய குற்றம் தனது மனத்தில் இருக்க மாட்சிமையுடையவராக நீரில் மூழ்கிக் காட்டித் தாம் அந்தத் தோற்றத்தில் மறைந்து வாழும் மாந்தர் உலகில் பலராவர். 9. கணைகொடிது யாழ்தோடு செவ்விது.ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல். 279 அம்பு, வடிவத்தில் நேராக இருந்தாலும் செயலால் கொடியதாகும். யாழ், வளைவுள்ளதாக இருந்தாலும் செயலால் நல்லதாகும். அதுபோல, மக்களைத் தோற்றத்தால் அறிந்துகொள்ளாமல் செயலினால் அறிந்து கொள்ளல் 10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். 280 தவம் செய்பவர்களுக்குத் தலைமயிரை மழித்தலும் அல்லது சடையாக்கலும் ஆகிய வேடம் ‘தவம் செய்வதற்கு என்று' தேவையில்லை. தவத்திற்கு ஆகாதது என்ற தீமையான ஒழுக்கத்தினை நீக்கி விட்டாலே போதுமானதாகும்.