பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்57



அறத்துப்பால் துறவற இயல் 57 29. கள்ளாமை (பிறருடைய பொருளைக் களவு செய்வதற்கு - தினையாமை) 1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. பிறரால் இகழப்படாமல் இருக்கவேண்டும் என்று எண்ணுபவன் யாதொரு பொருளினையும் கள்ளத்தனத்தினால் அடையக் கூடிய எண்ணம் புகாதபடி தனது நெஞ்சினைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். 2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். 282 குற்றங்களைத் தனது நெஞ்சம் நினைப்பதுவும் துறந்தார்க்குத் தீமையாகும். ஆதலால், பிறன்பொருளை அவன் அறியாதபடி கள்ளத்தனத்தால் கவர்ந்துகொண்டு விடுவோம் என்று நினையாதிருப்பாயாக! 3. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். 283 களவினால் உண்டாகின்ற பொருள் வளர்வது போலத் தோன்றி அளவினைக் கடந்து அழியும். மேலும் அது பற்பல துன்பங்களையும் கொடுத்து அறத்தினையும் கொண்டுபோகும். 4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வியா விழுமம் தரும். 284. களவு என்பதில் இருக்கும் வேட்கை அப்போது இனிது போலத் தோன்றிப் பயன்தரும்போது என்றும் நீங்காத துன்பத்தினைத் தந்துவிடும். 5. அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல், - 285 அருளினைப் பெறக் கருதி அதன்மீது அன்பு கொண்டிருப்பவராக நடந்துகொள்ளுதல் என்பது, பிறன் பொருளினைக் களவினால் எடுத்துக் கொள்ளுவோம் என்பவரிடம் உண்டாகாது.