பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்63



அறத்துப்பால் துறவற இயல் 63 32. இன்னா செய்யாமை (பிற உயிர்களுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாமை) 1. சிறப்பு:ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 311 பிறர்க்குத் துன்பம் செய்து தவமாகிய சிறப்புத் தரும் செல்வங்களைப் பெறலாம் என்றாலும், அதனைச் செய்யாதிருப்பதே மனம் மாசற்றவரது துணிவாகும். 2. கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 312 தம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் தருபவற்றைச் செய்தான் என்றாலும் மீண்டும் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாமை மாசற்ற தவசிகளின் துணிவாகும். 3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். 313 தான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும். 4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நான நன்னயம் செய்து விடல், 31.4 தமக்குத் துன்பம் செய்தவர்களைத் துறந்தவர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்தவர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டினையும் மறந்து விடுதலாகும். 5. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை, 315 மற்ற உயிர்க்கு வரும் துன்பத்தினைத் தனக்கு வந்ததுபோல நினைத்துக் காப்பாற்றாவிடில் உயிர் முதலானவற்றை உள்ளவாறு அறிந்த துறவிகளுக்கு, அறிவினால் ஆவதொரு பயனுண்டோ? இல்லை என்பதாம்.