பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

64



திருக்குறளார் தெளிவுரை 64 6. இன்னா எனத்தான் உணர்ந்தலை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். 3.18 'இவை மக்களுக்குத் துன்பம் தருபவை' என அறிந்தவற்றைத் துறவியானவன் பிறரிடத்தில் செய்வதைக் கருத்தில் கொள்ளாதிருத்தல் வேண்டும். 7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம் மானாசெய் யாமை தலை, 317 மனத்தோடு பொருந்திய துன்பம் தரும் செயல்களை எக்காலத்திலும், யார்க்கும் சிறிதேயாயினும் செய்யாதிருத்தல் தலையான அறமாகும். 8. தன்.உயிர்க்கு இன்னாமை தான்.அறிவான் என்கொலோ iO. மன்உயிர்க்கு இன்னா செயல். 3.18 பிறர் செய்யும் துன்பம் தன் உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிந்தவன், நிலைபேறுடைய பிற உயிர்க்குத் துன்பம் செய்வது என்ன காரணத்தால்? , பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். 319 பிறர்க்குத் துன்பத்தினை முற்பகல் செய்வானேயானால், தமக்குத் துன்பங்கள் பிற்பகலில் அவர் செய்யாமல் தாமே வரும். நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர். 320 துன்பமெல்லாம், பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்தவர் மேலதேயாகும். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர்கள் பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்ய மாட்டார்கள். -