பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்65



அறத்துப்பால் துறவற இயல் 65 33. கொல்லாமை (எவ்வுயிரியையும் கொல்லாதிருத்தலாகும்) 1. அறவினை யாது.எனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321 அறம் ஆகிய செய்கை யாது என்று கேட்டால் அஃது ஒர் உயிரையும் கொல்லாமையேயாகும். அவ்வாறு கொல்லுதல் தீமையான செயல்கள் பலவற்றையும் கொடுக்கும். 2. பகுத்துஉண்டு பல்உயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322 உண்பதனைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு. எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலுடையோர்கள் துறந்தார்க்குத் தொகுத்துக் கூறிய எல்லா அறங்களிலும் முதன்மையான அறமென்று சொல்லப்படும். 3. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுiஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323 தன்னோடு இணைப்பின்றித் தானேயாக ஒரேஒர் அறமாக இருக்க நல்லது கொல்லாமையேயாகும். அதன் பின்னே நிற்க, பொய்யாமை என்கின்ற அறம் நல்லதாகும். 4. நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும் கொல்லாமை சூழும் நெறி. 324 நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்றால், அது யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கும் நெறியேயாகும். 5. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. 325 பிறப்பு என்ற நிலையினை அஞ்சி ஆசையெல்லாம் விட்ட நீத்தார்களுள் எல்லாம் கொலைத் தீமையினை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தினை மறவாதவன் உயர்ந்தவனாவான்.