பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

68



திருக்குறளார் தெளிவுரை 68 6. நெருநல் உளன்.ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் உலகு. 336 ஒருவன் நேற்றைய தினம் இருந்தான்; இன்றைய தினம் இல்லாமற் போனான் என்று கூறப்படும் நிலையாமை மிகுதியினை உடையதாகும் இவ்வுலகு. 7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. 337 ஒரு பொழுதளவும் தமது உயிரும் உடம்பும் சேர்ந்து வாழ்வதனை அறிய மாட்டாதவர்கள் கோடியளவும் அல்லாமல் அதனினும் L19}总体螺具 நினைவுகளை நினைக்கின்றனர். 8. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு. 338 முட்டையானது தனித்துக் கி.ப்ப, அதனுள்ளே இருந்த பறவை பருவம் வந்தவுடன் பறந்துபோன தன்மையதாகும். எதுவென்றால், உடம்புக்கும், உயிருக்கும் உள்ள நட்பு என்பதாம். 9. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. 339 ஒருவனுக்குச் சாக்காடு வருவது, உறக்கம் வருவதற்கு ஒப்பாகும். அதன்பின் பிறப்பு வருதல், உறங்கியபின் விழித்தல் வருதலோடு ஒப்பாகும். 10. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. 340 உடம்புகளுள் ஒதுக்கமாகவே இருந்து வந்த உயிர்க்கு, எப்போதும் நிலையாக இருப்பதோர் இல்லம் இதுவரை அமைந்ததில்லை போலும்,