பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

துறவற இயல்69



அறத்துப்பால் துறவற இயல் 69 35. துறவு (செல்வங்களிடத்தும் உடம்பினிடத்தும் பற்றினை விடுதலாகும்) 1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 341 ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் பற்றற்று நீங்கினானோ அவன் அந்தந்தப் பொருளால் வரும் துன்பத்தினையடைதலை இல்லையாவான். 2. வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல. 342 எல்லாப் பொருள்களையும் துறந்துவிட்டால் ஒருவனுக்கு உண்டாகும் இன்ப்ங்கள் பலவாகும். அவ்வின்பங்களை விரும்பினால் அவற்றைக் காலமறிந்து துறத்தல் வேண்டும். 3. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343 மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளுக்கு உரியனவாகிய ஐந்து புலன்களையும் அடக்கிக் கெடுத்தல் வேண்டும். அப்படிக் கெடுக்கும்போது தாம் நுகர்வதற்குப் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். 4. இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை மயல்ஆகும் மற்றும் பெயர்த்து. 344 தவத்தினை நோற்பவர்களுக்குப் பற்று வைத்திருப்பதான பொருள் எதுவுமே இல்லாதிருத்தல் இயல்பாகும். அப்படிக்கின்றி ஒன்றின் மேலாவது பற்று இருந்து விட்டால் அத்தவத்தினைப் போக்கி மீண்டும் மயங்குவதற்குக் காரணமாகிவிடும். 5. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. 345 பிறப்பு அறுத்தலை மேற்கொண்டவர்களுக்கு உடம்பும் மிகையானதாகும். அப்படியிருக்க, அதற்கு மேலேயும் சில பொருள்களின் மீது தொடர்ப்பாடு உண்டாதல் என்னாகும்? 6