பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

76



திருக்குறளார் தெளிவுரை 76 8. பரியிலும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. 376 ஊழினால் தம்மிடம் இருக்கக் கூடாத பொருள்கள், வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடத்து நில்லாமல் போகும். ஊழினால் தம்மிடம் இருக்க வேண்டிய பொருள்கள் புறத்தே கொண்டு போய்த் தள்ளினாலும் தம்மைவிட்டுப் போகாவாம். r 7. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377 ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருள்கள் கோடி அளவில் சேர்த்து வைத்திருந்தாலும் இயற்கையாகிய ஊழ் வகுத்த வகையால் அல்லது நுகர்தல் (அனுபவித்தல்) முடியாததாகும். 8. துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். 378 ஊழ்வினைகள் அடைவிக்க வேண்டிய துன்பங்களை அடையும்படி செய்யாமல் நீங்குமேயானால், வறுமையினால் நுகர்தல் இல்லாதவர்கள் துறக்கும் கருத்துடையராவார்கள். 9. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன். 379 நல்வினை விளையுங்கால் இன்பம் என்று அனுபவிப்பவர்கள், மற்ற தீவினை விளையும்போது துன்பங்களை அனுபவிக்காமல் வருந்துவது ஏனோ? 10. ஊழின் பெருவலி யாவுள' மற்றொன்று சூழிலும் தான்முந் துறும். 380 தன்னை விலக்குதற்பொருட்டு வேறாகிய வழியினை முயன்றாலும், தான் பிறிதோர் வழியாகவாவது அந்த முயற்சிக்கு முந்தி நிற்கும். அதனால் வழினைப்போல மிக்க வலிமையுடையன யாவை உள?