பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அரசியல்77



பொருட்பால் அரசியல் 77 39. இறைமாட்சி (நாட்டிற்குத் தலைவனான மன்னனைப் பற்றிக் கூறுதல்) 1. படைகுடி கூழ்அமைச்சு நட்பு:அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. - 381 படையும், குடிமக்களும், பொருளும், அமைச்சும், நட்பும், அரணும் ஆகிய ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான். 2. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. 382 வேந்தர்க்கு இயல்பாக இருக்க வேண்டிய பண்புகள் எவையென்றால், அஞ்சாத் திண்மை, கொடை அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் இடைவிடாது நிற்றலாகும். 3. தூங்காமை கல்வி துணிவுஉடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. 383 பூமியை ஆட்சி புரியும் திருஉடையார்க்கு, செயல்களில் விரைவு உடைமையும், தக்க கல்வியும், ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணங்களும் எப்போதும் நீங்காதிருப்பனவாகும். 4. அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. 384 - அறத்திலிருந்து வழுவாமல் ஒழுகி, அறமல்லாதவற்றை நிகழ வொட்டாமல் கடிந்து வீரத்தில் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசனாவான். 5. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. 385 பொருள்வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கட்டி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்.