பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

என்ற பழமொழிக்கு அர்த்தம் என்ன வென்று நண்பர் கேட்டார். அதற்கு மற்ற நண்பர் உரை சொன்னாராம்.

‘விருந்தினர் வீட்டில் வந்து பசித்திருக்க, வேளாளன் உண்ணான்-அஃதாவது அவ்விருந்தினர் எழுந்துபோகும் வரை சாப்பிடமாட்டான் என்பதுதான் பொருள்-என்று சொன்னாராம். ‘இருக்க’ என்றால், விருந்தினர் வீட்டில் இருக்க ‘உண்ணான்’ வீட்டில் இருப்பவனே உண்ண மாட்டானாம். வந்தவர் போன பிறகுதான் உண்ணுவானாம்! இங்ங்னம் எண்ணுகின்றவர்களை மக்கள் என்னும் கணக்கில் வைக்காமல் மாக்கள் என்னும் பட்டியலில் தான் சேர்த்தல் வேண்டும்.

வாழ்வு :

‘உலகில் வாழ்வதனால் என்ன பயன்?’ என்ற கேள்வியினைக் கேட்டு அதற்குப் பதில் கூறுமுகத்தான் ஆசிரியர் வள்ளுவளுர் குறட்பா தருகின்றார். பயனுள்ள வாழ்க்கையாக வாழ்தல் வேண்டும். அந்த நோக்கமின்றி வாழ்தல் மனித வாழ்க்கை யாகாது. பயன் கொண்டு வாழ்கின்ற வாழ்வினைக் குறிக்க வேண்டியே அரிய குறட்பாவினை ஆசிரியர் தந்தார்.

ஈதல் இசைபட வாழ்தல்: அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

இசைபட அஃதாவது புகழுடன் வாழ்வதற்குக் கல்வி, ஆண்மை இன்னும் இவை போன்ற குணங்கள் செல்வங்கள் காரணமாக இருப்பவை என்று பேசப்பட்டாலும் மக்கள் உயிர்க்குப் பயன் என்பது ஈகைதான் என்ற உயரிய தன்மை இங்கு நன்கு தெளிவாக்கப்பட்டது. ஊதியம் என்பது ‘இலாபம்’ என்ற கருத்தில் கருதப்படவேண்டியது என்றாலும், மக்கள் வாழ்க்கையினைக் குறித்துப் பேசும் பொழுது அதனைப் ‘பயன்’ என்றே அமைத்தார்.

உலகில் உயிர் வாழும் மக்கள் பிறவியல்லாமல் ஏனைய பிற பிறவிகளுக்கெல்லாம் ஈதலும், இசைபட வாழ்தலும்