பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் இவ்வாறு தந்தியை வாங்கியதும் பெரும்துக்கத்தில் ஆழ்ந்திருந்தீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்கு அவர் பதில் சொன்னார். “நம் பையனுக்கு வேலை கிடைத்த செய்திதான் வந்திருக்கிறது. நல்ல செய்தியென்று முதத்தினை மகிழ்ச்சியோடு காட்டினால், தபால்காரர் ஏதாவது இனாம் கேட்பார். ஆதலால்தான் துக்கமான செய்தி வந்தது போல முகத்தைக் காட்டினேன்; தபால்காரர் போய்விட்டார்” என்று கூறி முடித்தார்.

இவரை எப்படிப்பட்ட கூட்டத்தில் சேர்ப்பது? தபால்காரர். இவரைக் கேட்பாரா என்பது வேறு. மிக நல்ல செய்தி ஒன்று வந்தவுடனே இவர் முகத்தை இப்படிக் காட்டினார் என்றால் எப்படிப்பட்ட கொடிய மனம் படைத்த பிறவியாக இவர் இருக்க முடியும்!

பொருளொன்றினையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வது வாழ்க்கையாகாதே. பொருள் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பது உலகறிந்த உண்மை. ஆனால் வாழ்க்கையின் பயன் யாது என்பது அக் குறிக்கோளினைவிட மிக உயர்ந்த குறிக்கோளாகக் கொள்ளப் பட வேண்டியதாயிற்றே.

பொருளினை ஈட்டவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்து மனித வாழ்க்கையின் பயனை உணராது வாழ்தல் விலங்கினமோ அல்லது ‘இயந்திர’ வாழ்க்கையோ என்று கருதப்பட வேண்டியதாகத் தானே முடியும் ?

கண்கள் : கண்கள் மிகவும் சிறந்த உறுப்புகளாகும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. கண் பார்வை இல்லாதவன் உலகில் வாழ்ந்து என்ன பயன் என்று பேசுவது இயற்கை