பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

போலி:

பார்க்க மிகவும் கவர்ச்சியான தோற்றமும், காவியுடை, கமண்டலம், குடுக்கை, தண்டம் முதலியவற்றுடன் காட்சியளித்த ‘சாமியார்’ எனப்படும் போலி வேடதாரியொருவர், மக்களைக் கூட்டமாகக் கூட்டி உட்கார வைத்துக்கொண்டு அறிவுரை செய்து கொண்டிருந்தார். மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.

முற்றும் துறந்த முதிர்ந்த ஞானியின் தோற்றமும் சொற்களும் மக்களைக் கவர்ந்துவிட்டன. செல்வம் நிலைத்து நில்லாதது-எப்போதும் மறைந்து போகும்-பணம்’ அழிந்து போவதாகும் என்று பணத்தை மிகவும் பழித்தும் மக்களுக்குப் பணத்தின் மீது ஆசை வைத்தல் கூடாது என்பதனை வலியுறுத்தியும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

கூட்டத்திலிருந்த ஒருவருக்கு இவருடைய மனம் எவ்வளவு தூய்மையான தென்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை. ‘சாமியார்’ எப்படிப்பட்டவரென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் பெரும் விருப்பம் கொண்டார்.

கூட்டத்திலிருந்து எழுந்தார், பணத்தினை அற்பமாகவும் ஆசையற்றும் பேசிக்கொண்டிருந்த சாமியார் பேச்சை நிறுத்தினார். அன்பர் ஒருவர் தம் அருகில் வருகின்றார் என்று எண்ணிப் பேச்சினை நிறுத்தி, வந்தவரை நோக்கி, “அப்பனே! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

உடனே அருகிற் சென்றவர் சாமியாரை, இரு கைகூப்பி வணங்கிப் பேசினார். “அடிகளார் அவர்களே! அடியேன் தங்களின் அறிவுரையைக் கேட்டு மனம் மாறிவிட்டேன். அடியேன், அன்பளிப்பாக ஐந்து ரூபாய் தங்கட்கு அளிக்கின்றேன், பெற்றருளுதல் வேண்டும்” என்று கூறினார்.

உடனே சாமியார்,... “அன்புள்ள பக்தரே! உமது பக்தியை மெச்சினோம்; மகிழ்ந்தோம். அப் பாவமான