பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஆடுகள்:

ஆடுகளை ஆற்றின் ஓரமாக நிறுத்திக்கொண்டு தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தானாம் ஒருவன். ஆடுகளை அழைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து அவன் போக வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்துவிடுமோ என்று பயந்தான். உடனே அவன் மனைவி அவனுக்கு ஒரு யோசனை கூறினாள். தன் அருகில் இருக்கும் கோயிலைக் கணவனிடம் காட்டிச் சொன்னாள்:

“இந்தக் கோயிலில் இருக்கும் சாமி, மிகவும் ஆற்றல் உள்ளதாம். இந்தச் சாமியிடம் வேண்டிக்கொண்டு, நாம் ஆடுகளை ஓட்டிக் கொண்டு ஆற்றைக் கடந்து பயமில்லாமல் போகலாம்.” இவ்வாறு மனைவி கூறியதைக் கேட்ட அவனும் சரியென்று ஒப்புக்கொண்டு, கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்த்து வேண்டிக்கொண்டான்

“ஆண்டவனே! எங்களைக் காப்பாற்று. நாங்கள் ஏழைகள், எங்கள் ஆடுகள் ஆற்றைத் தாண்டிக்கொண்டு போகும் வரை, ஆற்றில் வெள்ளம் வராமல் பார்த்துக்கொள். பத்து ஆடுகள் உன் கோயிலுக்கு விடுகிறேன்.”

இப்படி அவன் அந்தச் சாமியைப் பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு வந்தான். இதைக் கேட்ட அவனுடைய; மனைவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. கணவனைப் பார்த்துக் கேட்டாள்.

“என்னங்க, இப்படிச் சொல்லிவிட்டீர்களே! சாமிக்குப் பத்து ஆடுகள் தருகிறேன் என்று; ஓர் ஆடு என்ன விலை ஆகிறது! பத்து ஆடுகள் என்றால், எவ்வளவோ நமக்கு நட்டம் ஆகிவிடுமே!”

மனைவி இவ்வாறு சொல்வதைக் கேட்ட அவன் மனைவியின் அருகில் வந்தான். அவளிடம் மிக மிக இரகசியமாகப் பேசினான். காதோடு காதாகச் சொன்னான், அஃதாவது கோயிலில் இருக்கும் சாமிக்குக் கேட்காதபடி, “பத்து ஆடுகளையும் கொடுத்துவிடுவேனோ? சாமிக்கு