பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

அப்படிச் சொன்னேன். ஆற்றைத் தாண்டிய பிறகு ஏமாற்றிவிடமாட்டேனா?”

இவ்வாறு சொன்ன பிறகு, மனைவி கணவன் சாமார்த்தியத்தை நினைத்து மகிழ்ந்துகொண்டாளாம். நாம் முன்பு பேசிய சாமியாரின் வஞ்சமனத்தின் வரிசையில் வருகின்றவனே இந்த ஆட்டுக்காரனுமாவான்.

நிலம், நீர், தீ, காற்று, விண் என்று பேசப்படுகின்ற ஐந்தும் இயற்கையின் கூறுபாடுகள் - ஐந்து பூதங்களாகும், இந்த ஐந்தினாலும் ஆனதுதான் உடம்பின் அமைப்பு. இவைகள் அறியாத நிகழ்ச்சியில்லை. எனவே நாம் செய்யும் அனைத்தும் அவைகளுக்குத் தெரியுமன்றோ?

வஞ்சகமான செயல் செய்பவனுக்கு இது புரியாமல் போயிற்றே. ‘படிற்றொழுக்கம்’ செய்கின்றானே! யாருக்கும் தெரியாதென்று எண்ணி நடந்து கொள்ளுகின்றானே! வஞ்சமனத்தான் என்று குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்தில் பலப்பல ஆழ்ந்த எண்ணங்கள் பொதிந்துகிடக்கின்றன.

உள்ளத்தில் சிற்றின்ப எண்ணம் தலைவிரித்தாட அதனையும் மறைத்திருப்பதாக எண்ணுகின்றான். தான் செய்கின்ற கள்ளச் செய்கையினைப் பிறர் அறியக்கூடாது என்று நினைக்கின்றான். இவனுடைய செய்கைகளையெல்லாம் அவன் அறியாமலே புலன்கள் அறிந்துகொண்டு சிரிக்கின்றன வென்பதைத்தான், அகத்தே நகும்’ என்று சுருக்கமாகக் குறிக்கின்றார் ஆசிரியர், இதோ குறட்பா பேசுகின்றது:

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

நகைத்து மகிழ்தல் என்பது எல்லா நேரங்களிலுமே மாசற்ற உள்ளக்கிடக்கையினைக் காட்டிவிடுதல் ஆகாது, அச்-