பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சிரிப்பில் அடங்கிக்கிடக்கின்ற புதைபொருளினையும் கண்டறிதல் வேண்டுமன்றோ?

ஊர் சிரிப்பு

பிறர் அறியாமல் தவறு செய்கின்றவனைக் காணுகின்றபோது மற்றவர்களுக்குச் சிரிப்பு வருவது இயற்கையேதான்! ஒழுக்கக்கேடான செயல்களை எப்போதும் மறைத்தே செய்கிறார்கள். ஒரு சிலரைக் கண்டால் ஊரே சிரிக்கும் என்று கூறுகிறார் ஆசிரியர் வள்ளுவனார். ‘ஊர் சிரிக்கிறதே’ என்று நடைமுறையில் இக் காலத்தில் பேசப்படுவதையும் நாம் காணுகின்றோம்.

யாரைப் பார்த்து ஊர் சிரிக்கிறது? கள்குடியர்களைப் பார்த்து ஊரே சிரிக்குமாம். மதிமயக்கும் தகாதனவற்றை உட்கொள்ளும் அனைவரையும் பார்த்து ஊர் மக்கள் சிரிப்பார்கள் என்று கூறுகின்றார். நகைச்சுவையின் கருத்தாகக் கொண்டு நயமானதோர் உண்மையினை ஆசிரியர் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றார்.

அறிவு மயங்கி, மதி கெட்ட குடிகாரன் என்ன பேசுகின்றோம் என்பதே அறியாமல் பேசிவிடுகின்றான். அந்தோ! குடியில் மயங்கி மதி கெட்டு நிற்பவன் எதிரில் இருப்பது தூண் என்பதைக் கூட மறந்து அவன் கண்களுக்கு மனித உருவமாகத் தென்பட்டு, “சிற்றப்பா! எப்போது வந்தீர்கள்!” என்று கேட்பான். இன்னும் அவன் பேசுகின்ற பேச்சுக்களும் செய்கின்ற செயல்களும் சொல்லில் அடங்கா.

கள் குடிப்பவன் மறைவாக இருந்து குடிக்கின்றான். குடித்து அறிவு மயங்கிச் சோர்ந்து கிடக்கின்றான். இவனுக்கு இதே வேலை போல இருந்துவிடுகின்றது! “கள் ஒற்றிக் கண் சாய்பவர்” என்று குறட்பா முடிந்துவிடுகிறது. ‘ஒற்றி’ என்பது மறைந்து செய்வதையும், ‘கண்