பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

சாய்பவர்’ என்பது அறிவு மயங்கிக்கிடப்பதையும் குறித்துவிடுகின்றன. இப்படிப்பட்ட குடிகாரர்களைப் பார்த்து, ஒருவர் இருவர் சிரிப்பர் என்று சொல்லித் திருவள்ளுவர் நிறுத்திவிடவில்லை. இத்தகையவர்களைக் கண்டு ஊர் மக்கள் அனைவருமே சிரிப்பார்கள் என்று மிகமிக இழிவாகக் கூறிவிடுகிறார். ‘எஞ்ஞான்றும்’ எக்காலத்திலும் இவர்களைக் கண்டு ஊர் மக்கள் எள்ளி நகையாடுவர் என்பதாகும்.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்.

குடித்திருப்பவன் தனது செயலினைப் பிறர் அறியக்கூடாது என்று மறைத்து வைத்திருந்தாலும் ஊர் மக்கள் எப்படியும் தெரிந்துகொள்ளுவார்களாம். ‘உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர்’ என்று கூறினார்.

அறிவு மயங்கி இருக்கின்றான் என்னும் காரணத்தைப் புரிந்துகொண்டு மக்கள் சிரிப்பார்கள் என்பதாம். இங்கே ஆசிரியர் குறித்துக் காட்டுகின்ற நகைப்பு மிகவும் கருத்துச் செறிவும் உலக உண்மை இலக்கணமும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கின்றதென்பது வெளிப்படையாகும்.

நகுதல் என்பது மறை பொருளான பல உண்மைகளையும் குறித்துக் காட்டும் இயல்புள்ளதென்பதை அனுபவத்தில் காணுகின்றோம். வள்ளுவர் உலகம் இவ்வுண்மையைப் பல கோணங்களில் நின்று நமக்கு அறிவுறுத்துகின்றது. நகைப்பு என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் ஒப்ப முடிந்ததேயாகும். மக்கள் பிறப்புக்கே சிறப்பாக அமைந்த குணம் நகைத்தல் என்னும் சிரிக்கும் பண்பாகும். ஏன்? விலங்கினங்கட்குச் சிரிக்கத் தெரியாதன்றோ? முடியாதன்றோ?

பெண்கள்:

ஆண்கள் நகைத்து மகிழ்வதற்கும் பெண்கள் நகைப்புக்கும் வேறுபாடு உண்டு. அளவோடும் குறிப்போடும் நகைத்-