பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தல் மகளிர்க்கு இயல்பாக இருக்க வேண்டிய உயர் குணமன்றோ? ஆசிரியர் வள்ளுவனார் பெண்கள் நகைத்தல் - சிரித்தல்-என்பதைப்பற்றி மிகமிக நயமாகவும் உட்பொருள் சிறப்புடனும் கூறுகின்றார்.

நகைப்பு என்பது உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துங்கருவி என்பது பொது விதி. இப்பொது விதியின் கருத்தோடு காணுகின்றபோது பெண்கள் நகைப்பதில் மிக ஆழமான உண்மைகள் அடங்கிக்கிடக்கின்றன என்பது முற்றிலும் உண்மையாகும். புரிந்துகொள்ள முடியாத சிரிப்புக்கள் பல இருக்கின்றன; நாம் பழக்கத்தில் கண்டு வருவதேயாகும்.

ஒரு சிலர் நம்மைப் பார்க்கும் போது ஏதோ நினைத்துக்கொண்டு சிரிப்பார்கள். உடனே நாம் ‘ஏன் சிரிக்கின்றீர்கள்?’ என்று கேட்கின்றோம். அதற்கு அவர் ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லுவார். இருந்தாலும் நாம் விடமாட்டோம். சிரித்ததற்குக் காரணம் சொல்லி நாம் கேட்கும்வரை நமக்கு மனம் அமைதிகொள்ளாது. ஏன்?

சிரிப்பு என்பது அத்தகைய ஆழமான குறிப்புகளைக் கொண்டதன்றோ? பெண்கள் சிரித்தல் பெருங்குறிப்புகளை உணர்த்துவதாக அமைந்துவிடுகின்றது. ஓர் ஆண் மற்றோர் ஆணைப் பார்த்துச் சிரிப்பதால் உண்டாகின்ற நிலையைவிட ஒரு பெண் ஓர் ஆணைப் பார்த்துச் சிரிப்பதில் மிகமிக ஆழ்ந்த எண்ணங்கள் உண்டு என்பதை ஆசிரியர் வள்ளுவனார் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார்.

‘தன்னுடைய உள்ளத்திலுள்ள மறைபொருளான பெரும் எண்ணமொன்றினை எளிதான புன்முறுவலென்னும் நகைக் குறிப்பினால் ஒரு பெண் உணர்த்தி விடுகின்றாள்’ என்று ஆசிரியர் கூறுகின்றார்.

பெண்கள் நகைத்தல் - சிரித்தல் - என்பது அளவோடு இருத்தல் வேண்டும். ஒரு பெண் நகைத்தாள்; புன்முறுவல்