பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

செய்தாள். அப்படி அவள் செய்தது மிக இயல்பானது என்று நடைமுறைப் பழக்கத்தில் பேசுகின்றார்களே, அப்படியானதாகக் கருதி இருந்து விட முடியுமா? இல்லை என்கிறார் ஆசிரியர் வள்ளுவனார்.

அவள் காட்டிய நகைக்குறிப்பில் உள்ளடங்கிய பெரும் உண்மையொன்று அடங்கி இருக்கின்றதாம். அவ்வுண்மை வெளிப்படையாகவும் தெரியாதாம். அந்த நகைக் குறிப்புலிருந்து அதனைப் புரிந்துகொள்ள வேண்டுமாம். இதற்கு அழகான உவமையொன்று காட்டப்படுகின்றது.

அரும்பு இன்னும் மலரவில்லை; ஆம், மலராத அரும்பில் மணமேது? மலரில் மணமே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? எப்படிச் சொல்ல முடியும்? மணம் முகிழ்ப்பாக இருக்கின்ற அரும்புக்குள் இருக்கத்தான் செய்கிறது. மணம் இருக்கிறதென்பது உறுதிதான்; உண்மைதான். ஆனால் அரும்பாக இருந்தால் மணம் வெளிக்குத் தெரியுமாறு வீசவில்லை. அருமையான உவமையினால் ஆசிரியர் பெண்ணின் நகைக் குறிப்பினை விளக்க வருகின்றார்.

‘முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல்’

என்ற சொற்களைக் கொண்டு குறட்பா வருகின்றது. ‘நாற்றம்’ என்பது நல்ல மணம் என்பதாகும். மணம் அந்த அரும்பு முகிழ்த்திருப்பதற்குள் இருக்கின்றது. அத்தகைய மறைபொருளொன்று அப்பெண் நகைக்கின்ற தோற்றத்தில் அடங்கிக்கிடக்கின்றதாம்.

‘நகுதல்’ என்பது எத்தகைய வன்மை நிறைந்தது என்றுகூடக் குறிப்பிட்டுப் பேசலாம். அப் பெண்ணின் உள்ளத்தில் ஏதோ ஓர் எண்ணம் இருக்கின்றது. அவ்வெண்ணத்தினை அவள் வெளியிட்டுச் சொல்ல விரும்பவில்லை.

புன்முறுவல் காட்டி நகைக்கின்றாள். ஆம்! அந்த நகைப்பு அவள் உள்ளத்திலிருக்கும் அளந்து பார்க்க முடி-