பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


எழுதி வெளிட்டு வந்தேன். இந்தப் பணியினை 1945ம் ஆண்டிலிருந்து செய்து வந்தேன். பேச்சினாலும், எழுத்தினாலும் கடந்த 50 ஆண்டுகளாக அடியேன் செய்து வந்த தொடர்ச்சியான பணியினால் தான் திருக்குறள் சிந்தனை மக்களிடையே நன்கு பரவத் தொடங்கியது என்று கூறுவது மிகையாகிவிடாது.

அந்தக் காலத்தில் நான் எழுதி வெளியிட்ட சிறுசிறு நூல்களை எல்லாம் தொகுத்து வெளியிடவேண்டும் என்று என்னுடைய நண்பர்கள் பெரிதும் ஆர்வத்தினை உண்டாக்கினார்கள். அத்தகைய தொகுப்பு நூல்களில் ஒன்றுதான் இந்த நூலும் ஆகும்.

1952ம் ஆண்டு முதல் 1957 வரையில் டெல்லி பாராளுமன்றத்தில் நான் உறுப்பினராக இருந்த காலத்தில் அந்தச் சபையில் திருக்குறள் ஒலிக்குமாறு செய்ய முடிந்தது என்பதனைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத நாட்டின் வடக்கே பல முக்கிய நகரங்களுக்குச் சென்றுகுறள் மணம் பரப்புகின்ற பணியினைச் செய்ய முடித்தது. பல முறை கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று திருக்குறள் தொண்டு செய்வதில் மனநிறைவு பெற்றேன்.

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும், திருக்குறள் பயிற்சி பெற்றிராவிட்டால், தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் பெருமைக்கு உரியவர் ஆகமாட்டார் என்பது எளியேன் கருத்தாகும்.


அன்புள்ள,

திருக்குறளார் வீ. முனிசாமி,

ஆசிரியர்.