பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாராட்டுரை

இறைவன் மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்களுக்குச் சிரிப்பைக் கொடுக்கவில்லை.

நகை என்ற சொல்லுக்குச் சிரிப்பு, மகிழ்ச்சி, ஒளி, ஆபரணம் எனப் பல பொருள்கள் உண்டு.

கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ

வாயார் பெருநகை வைகலு நக்கே
- புறநானூறு 212:8-10.

கோழி என்னும் உறையூரில் அரசு புரிந்த கோப்பெருஞ் சோழன் மாசற்ற நட்பு பூண்ட பொத்தி என்னும் புலவரோடு அளவளாவி உண்மையாகப் பெருமகிழ்ச்சியில் சிரித்து நாடோறும் மகிழ்ந்திருந்தான்.

அப்படிப் புலவர்கள் புரவலரைச் சிரித்து மகிழும்படிச் செய்வதால், அவர்கள் நகைப் புலவாணர் என்று அழைக்கப்பட்டார்கள். (புறநானூறு 387).

அப்படி நம் திருக்குறளாரும் நகைப் புலவாணர். அவர் நகைச்சுவையாகப் பேசுவது போலவே இந்நூலில் நகைச் சுவையான கதைகளைச் சொல்லியுள்ளார்.

திருக்குறளார் குறட்பாக்களில் உள்ள நகைச்சுவையைக் கடைந்தெடுத்து அதில் தோன்றிய அமிழ்தம் அன்ன கருத்துகளை விளக்கிக் கூறுகிறார். ஓவ்வொரு கருத்துக்கும் தலைப்பு தந்து விளக்குகிறார்.

நூலாசிரியர் நகைச்சுவை என்னும் முதல் தலைப்பில் நகைச்சுவையை விளக்கிக் கூறி முடிவில், சிரித்து மகிழ இருவர் அல்லது பலர் ஒன்று கூடி இருத்தல் வேண்டும். அப்படி இல்லாமல் ஒருவன் தன்னந்தனியாகவே சிரித்துக் கொண்டிருப்பானேயானால் அதனை நகைச்சுவை என்று சொல்லிவிட முடியாது: வேறு ஏதேனும் இடர்ப்பாடான காரணந்தான் இருக்கமுடியும். என்றார். அடுத்து அவர்