பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

வேண்டியதாகும். உலகத்தில் வாழும் மக்கள் ஒருவரோடொருவர் ஆதரவு தந்து வாழ்வதுதான் இயற்கையின் விதியாகும். தனித்திருந்து வாழ்தல் யாருக்குமே எளிதான தன்று. பெரும் பெரும் நாடுகள் வல்லரசுகள் என்று பேசுகின்றபோதும் ஆதரவு இருப்பது இலக்கணமாகத் தான் அமைந்தது.

ஆனால் ‘ஈதல்’ - ‘ஈகை’ என்பதைப் பேசுகின்றபோது இல்லாதவர்களுக்குக் கொடுப்பதையே குறிக்கின்றோம். இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் ‘ஈகை’ என்பதனை உரியவர்களுக்குக் கொடுக்கும் பெருந்தன்மை என்று கூறுவர். இவ்வுயரிய பண்பாடு சிலரிடமாவது இருப்பதால்தான் இவ்வுலகமே இருந்து வருகிறது என்று கூறுவர். இருப்பவர்கள் - இல்லாதவர்கள், அஃதாவது பொருள் இருப்பவர்களும் வறுமையாளர்களும் இவ்வுலகில் வாழ்வது இயற்கையேயாகும்.

இந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாத நாடுகள் இருக்கின்றன என்று யாரும் கூற முடியாதல்லவா ? வசதிகள் இருப்பவர்களுக்குக் கொடுப்பது ஈகையாகாது என்பதனை நன்கு புரிந்துகொள்ளுதல் வேண்டும். இல்லாத வறிஞர்களுக்குக் கொடுப்பதைத்தான் ஈகை என்று பற்பல விளக்கங்களைக் காட்டி ஆசிரியர் வள்ளுவளுர் கூறியுள்ளார்.

புகழுடனும் சிறப்புடனும் வாழ்கிறான் என்பதற்கு அடிப்படையான காரணமே ஈகை என்பதாகும். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்கின்ற குறிப்பும் ஆசிரியர் வள்ளுவனாரின் அரிய வாக்காகும். ஈகைத்தன்மையினால் மற்றவன் பயன் பெறுகின்றான் என்பது கருத்தாகக் கொண்டு விடுவதற்கில்லை. கொடுப்பவன் அடைகின்ற இன்பத் தினைத்தான் நாம் உணர்தல் வேண்டும்.

“ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்” என்றொரு குறட்பா ஆரம்பமாகிறது. இக் குறட்பாவினல் முப்பெரும் உண்மைகளை எடுத்துக் கூறுகிறார். பிறருக்குக் கொடுப்ப