பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


மனிதப் பிறவியின் உண்மையினையும் தன்மையினையும் உணராத காரணம் என்று தான் கூறுதல் வேண்டும். மக்கட் பிறவியை யெடுத்ததனால் செய்து முடிக்கவேண்டிய உயர்ந்த கடமைகளைச் செய்த பிறகு மனிதன் மனநிறைவு கொள்ளுதல் வேண்டும். "நாம் உண்டு; நமது சுயநல வேலை யுண்டு" என்னும் கண்மூடித்தனத்தில் வாழ்ந்து மறைவது மக்கட் பிறவியின் குறிக்கோள் ஆகவே ஆகாது.

செய்யவேண்டிய நற்செயல்களான மனிதக் கடமையினைச் செய்து முடித்து, அதன் பிறகு இறப்பு வருகின்ற போது அவன் தனக்குள் சொல்லிக்கொள்ள வேண்டியதாவது: "இனி நான் இறந்தாலும் கவலையில்லை; எனது கடமையினைச் செய்து முடித்தேன்" இவ்வாறு எண்ணி முடிவினை வரவேற்பவன் தான் சிரித்துக் கொண்டே இறப்பவனாகின்றான்.

ஆதலால்தான் 'இறக்கும்போதே சிரித்துக்கொண்டு இறப்பாயாக' என்று சுருக்கமாகக் கூறிவைத்தார்கள். உத்தமன் உலகை விட்டு மறைந்தான் என்றால் மக்கள் வருந்துவது இயல்பேதான். ஆதலால் தான் குழந்தையாகப் பிறந்தபோது சிரித்து மகிழ்ந்தவர்கள் இறந்தபோது அழவேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் சிலர் இறந்தார்கள் என்றால் மக்கள் வருந்தி அழுவதில்லை என்பதும் உண்மைக்கு மாறுபட்ட தென்று கூறி விடமுடியாதது.

ஈகை :

'நகை' என்பதனைச் சேர்த்துவைத்து நான்கு அரிய பண்பாடுகளைக் கூறினாரல்லவா? அந்த நான்கும் புன்முறுவல் என்னும் சிறந்த குணத்துடனே பொருந்திய அருமையான குணங்களாகும். இரண்டாவதாக அமைந்த குணம் 'ஈகை' என்பதாகும்.

இக் குணம் பெரும்பாலும் நற்குடியில் பிறந்தவர்களிடத்தில் இயல்பாக இருப்பதாகும், பழக்கவழக்கத்தினாலும் இப் பண்பாடு வந்துவிடுதல் பாராட்டப்பட