பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 25 பசியுடம்பிலே யிருந்தால் ஞான வொழுக்கங்களையு மறிவையுங் கெடுக்குமென்பதாம் GT 228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் என்பது தம்முடைய பொருளைப் புதைத்து வைத்து இழந்து போன வர்கள் அறிவுந்தயையு மில்லாதவர்களாய்த் தரித்திரர்களுக்குத்” தாங்கள் தேடின பொருளைக் கொடுத்து அதனால் வருஞ் சுகத்தை யனுபவிக்கிறவர்களைக் கண்டறியார்க ளென்றவாறு. அறத்தாற்றாமுமப்படியே கொடுத்து இன்பத்தை யெய்து வர்களென்பதாம். تھے۔ | 229. இரத்தலி னின்னாது மன்ற நிரம்பிய" தாமே தமிய ருனல் என்பது பொருட்குறை நிறையவேணு மென்று தரித்திரராயிருக்கிற பேர்களுக்குக் கொடாது தான் தேடிய பொருளைச் சும்மாய் வைக்கிறது. இரக்கிறத்திலும் பொல்லா தென்றவாறு. இரக்கிறவர்களுக்கு நல்குரவான தரித்திரமில்லை; சுற்றத் தாருண்டு பொருளைத்தேடிப் புதைக்கிற பேருக்குத் தரித்திர முண்டு; சுற்றத்தாரில்லை யென்றவாறு. 55 230. சாதலி னின்னாத தில்லை யினிததுஉ மீத லியையாக் கடை என்பது ஒருவற்குச் சாகிறத்தைப்போலப் பொல்லாதது வேறொன் றில்லை; அந்தச் சாவுந் தரித்திரருக்கு ஒருபொருளைக் கொடுக்க மாட்டா விட்டா லப்பொழுது சாகிறது நல்லதா யிருக்கு மென்ற வாறு. عہی .1 A. "அதிதிபுத்திரர்களுக்கு' என்பது அச்சுநூல் அ. 'திரப்பிய என்பது பிறர்பாடம் 4. இரக்கிறதிலும்