பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை * 139 பொருளின்பங்களின் ஆசையாகிற வலையிலே அகப்பட்டுத் கங்களுக்குக் கேடு ச்ெய்து கொள்ளுவார்கள் என்றவாறு. அதித்தியமாகிய சரீரத்திற்கு வருத்தம் வருமென்றுபயப் படாமல் தபம் செய்தால் பிறப்புப்பிணி மூப்புச் சாவுகளால் அக்கமடைந்து வருகிற வுயிர் தபசினாலே ஞானம் பிறந்து வீடு பெறும் என்பதாம். அா 267. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்பது நெருப்பிலே பொன்ன்ைச் சுட்டாற் றன்னோடு கூடிய குற்றம் நீங்கி யொளி மிகுத்தவாறு போலத் தவசு பண்ண வல்லவர்களுக்குச் சரீரம் வருந்தினாற் றங்களோடே கூடின பாவங்கள் நீங்கி ஞான மிகு மென்றவாறு. エ 268. தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும் என்பது தன்னுயிரைத் தனக்குரித்தாகப் பெற்றவனை யுலகத்திலே யுண்டான சீவன்க ளெல்லாந் தோத்திரம் பண்ணு மென்றவாறு. தன்னுயிரைத் தனக்குரித்தாகப் பெறுதலாவது, தவமாகிய தன் கருமஞ் செய்தல்: அதிலும் பெரிய காரியமில்லை. தவசு பண்ணினால் சீவனை வருத்தப்படாமல் சுபத்தை யடையும்: தவசினாலே சாபமும் அனுக்கிரகமு முண்டா மாதலால் எல்லாரும் வணங்குவார்களென்பதாயிற்று. لگی۔ | === - - 1. நிலையாததாகிய 2. "சரீரம் வருந்தினால்' என்ற விடத்தில், அச்சுநூலில் "சுக்கிலத் தியானம் .זהsiעי பெருந்தியினால்' என்பவை உள்ளன (குறிப்புரை காண்க 3. இவ்வாக்கியத்துக்குப்பதில் தபத்தின் முக்கியத்தினால் கருமம் செய்தல்' என்பது அச்சு நூல் 4. சிவனைத்தர்க்கதி போகாமல் சுப.கதி அடைவிக்கும் - என்பது அச்சு நூல்.