பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருக்குறள் தன்னாற் தேடப்பட்ட பொருள்களாற் றனக்கு இம்மை மறுமைக்குச் செய்து கொள்ள வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ளாது பணத்தைச் செலவு பண்ணாமற் கெட்டியாய்த் தேட வேணுமென்று வைத்தவன் செல்வம் வெகு சீக்கிரத்திலே கெட்டுப்போ மென்றவாறு. கொள்ளவேண்டிய காரியங்களாவது", தானதர்ம பரோப காரங்கள் தனக்கு உணவு முதலியன செய்து கொள்ள ல், திரவி யத்தை நாள் தோறும் வளரப்பண்ணுதல்-இப்படிச் செய்து கொண்டராசாவுக்கு ஒரு காலமும் குற்றம் வராதென்பதாம். எ 438. பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப் படுவதொன் றன்று. என்பது பொருள்களைச் சிலவு'பண்ணு மிடத்து ஆசை யென்னப் படா நின்ற லோபம் குற்றங்கள் எல்லாவற்றிலும் பெரிய குற்ற மென்றவாறு. * அந்த லோபமென்பது சகலமான குணங்களை யெல்லாங் கீழ்ப்படுத்தி, நல்லவன் என்கிற பேரையுங் கெடுத்து விடுமென்ப தாம். ஆகவே சற்றும் லோபமாகா தென்பதாம். تلے # 439. வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பவா வினை என்பது தான் சகல குணங்களாலும் நிறைந்திருந்த பெரியோனே யாயி னும் அந்த மதத்தாற் றன்னை நன்கு மதியா தொழிக; தனக்கு நல்லதல்லாத காரியங்களை மனத்தினும் நினையாமலிருக்க வென்றவாறு. தன்னைத்தான் பெருமையா யெண்ணுங்காலத்துத் தனக்கு வரப்பட்ட குற்றங்களை நினைத்து விலக்கக் கூடாதாம்: ஆகவே தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளலாகாதென்பது. తిF 1. செலவு 2. ஆவன. 1. செலவு