பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 0 திருக்குறள் 446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் என்பது முன் சொல்லப்பட்ட பேர்களைத் தனக்குறவாகிய இனங் களாகப் பண்ணித் தானும் மேல் வருங்காரியங்களை நன்றாக விசாரித்து அறிந்து நடக்கவல்ல ராசாவைச் சத்துருக்களாலே ஒரு காலத்திலும் ஒன்றுஞ் செய்யக்கூடாதென்றவாறு. தக்காரென்பது, அறிவு ஆசாரம் முதலானது தப்பாமல் நடந்து தர்மசாத்திரப்படி யறிந்து நடப்பிக்கவல்லவர்கள். செற்றாராகிய சத்துருக்களாவர், சினேகிதரைப் பிரிப்பிக்க வல்லவர் பகையாளியல்லாத பேரைப் பகையாக்குகிற பேர்கள். இப்படிப்பட்ட தொழில்களாலும் தங்கள் பலத்தாலும் பலபல விதங்கள் சத்துருக்களாற் செய்யப்பட்டதானாலும் அதுகளைத்' தானும் நன்றாக ஆராய்ந்தறிந்து பெரியோர்கள் சொல்வழியுங் கேட்டு நடக்க வல்ல பேர்களிடத்திலொன்றும் வராதென்ப தாம். முள் 447. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் என்பது தீயனவாகிய பாவங்களும் நீதியல்லனவும் வராதபடி சொல்லி நடப்பிக்க வல்ல பெரியோர்களைத் தனக்குச் சிறந்த தோழராக வுடைய ராசாவைக் கெடுக்கப்பட்ட பேர்களுலகத்தில் யாவரு மில்லை யென்றவாறு. o Т 448. இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்பது தனக்கு நீதியறிந்து சொல்லப்பட்ட மந்திரி புரோகிதர் முதலான பெரியோர்களைத் தனக்குத் துணையாகக் கொள்ளா 1 முதலானவை 2. பகையாக்குகிற 1 . அவைகளைத்