பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜை ன உரை 2 O 9 முன்சொன்ன மந்திரி முதலான பெரியோர்களை அவர்கள் மனது சந்தோஷமாம் படி செய்து தமக்கு மெத்த சினேகித ராகப் பண்ணிக் கொள்ளுகிறது. ராசாமுதலான பேருக்கு அருமையான பொருள் எல்லாத்திலும் அருமை யென்றவாறு. உலகத்திலே அரிய பொருள்களெல்லாம் ராசாக்கள் பெற வேண்டுவதாதலின் இப்படிப்பட்ட பேர்களைச் சினேகிதராக்கிக் கொள்ளவே சகலமுவருமென்பதாம். [һ... 444 தம்மிற் பெரியோர் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை என்பது அறிவு முதலான நல்ல காரியங்களிலே தன்னிலும் பெரிய வர்களைத் தமக் கு உறவாகப் பண்ணிக் கொள்ளுதல், அந்தப் பெரியவர் சொற்படி கேட்டு நடத்தல், ராசாக்களுக்குச் சகல பெலத்திலும் மிகுந்த பலனென்றவாறு. திரவியஞ் சேனை நல்ல பத்திரமான இடம் இதுகளைப்3 பார்க்கத் தனக்கு வந்த குற்றங்களெல்லாத்தையும் தீர்க்கப் பட்ட பெரியவர்களிட" வுறவே மெத்த நல்லதென்பதாம் క్తిF 445 சூழ்வார் கண்ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொனல் என்பது ராசா மந்திரிகளைத் தன் கண்போலப் பார்த்து நடத்தி வருதல் முறைமை; அப்படிப்பட்ட மந்திரிகளை யாராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ளுக வென்றவாறு. ராசா தானே சகலமான காரியங்களையு மறிந்து நடப் பிக்க வல்லவனாகிலும், மந்திரிகளை யல்லாமல் நடவாதென்பது கொண்டு, கண்போலப் பார்க்க வேண்டுமென்பதாம். டு 1. எல்லாவற்றிலும் 2. 'மிகுத்து' என்று சுவடியில் உள்ளது 3. இவை க. ளைப் 4. எல்லாவற்றையும் 5. பெரியவர்களுடைய