பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 2 திருக்குறள் இப்பால் 46. சிற்றினஞ் சேராமை என்பது, சிறிய வினங்களைப் பொருந்தாமை, சிறியவின மாவது நல்ல பொருள்களினுடைய நன்மையும், பொல்லாத பொருள்களினுடைய நன்மையும் பொல்லாங்குகளுந் தெரியாம லொன்றுமில்லை யென்பவரும், அடங்காத காளைகளும் எக் காலமும் பொல்லாத தொழில்களே செய்யப்பட்ட துரத்தரும்’ கூத்தாடி முதலாகிய கூட்டங்களுமாம். இப்படிப்பட்ட பேர் களுடனே சினேகம் பண்ணினால் எந்த விதத்திலு மறிவைக் கெடுத்து இம்மையிலே பொல்லாதவன் என்பிச்சு மறுமையிலே பொல்லாத கெதியிலே விடுமாதலால் இப்படிப்பட்ட பேர் களுடைய உறவு ஒரு காலத்திலு மாகா தென்பதாம். 451. சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடல்" என்பது பெரியோர்களுடைய வியல்பு சிறிய வினமாகிய ஈனரை யஞ்சவேண்டும்: அந்தச் சிறிய வினங்களைச் சேர வேயப் பொழுதே யவர்களையே சுற்ற மாக்கிப் பெரியோர்கள் சேரார்க ளென்றவாறு. சிறிய வினங்களைச் சேரவே நல்லறிவு கெட்டுச் சகல துன்பங்களும் வந்தடையும்; ஆகவே பெரியோர் சொல் இகட்சியாய் நிற்கும்; இதனாற் சிறிய வினம் பெரியோர்க ளாகா தென்பது கூறப்பட்டது. அ 452. நிலத்தியல்பா னிர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு என்பது தண்ணிராவது எந்த நிலத்தைச் சேருதோ அந்தப்படியாய் நின்று தன் குணங் கெட்டுப்போம்; அது போல மனிதர்க்குத் 1. காலைக்கும் என்று காகிதச் சுவடியில் உள்ளது. 2. துார்த்தர் - வஞ்சகர் 3. எண்பித்து என்பது அச்சுநூல் 1. விடும் என்பதே பிறரெல்லாம் கொண்டபாடம் 2. இகழ்ச்சியாய் 3. சேருகிறதோ