பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 4 திருக்குறள் 'தன்னிடத்தி லெத்தனை நல்ல வறிவிருந்தாலும் தீயினங் களைச் சேரவே நாள்தோறும் அந்த நல்ல வறிவைக் கெடுப்ப ரென்பத்ாம். இனம் நல்ல்தானால் எல்லா நற்குணங்களுமுண்டா மென்பது. శొ 455. மனந்துய்மை செய்வினை தூய்மை யிரண்டும் இனந்துய்மை துவா வரும் என்பது அந்த நல்ல வறிவு பயன்படுதற் கிடனாகிய மனது சுத்த மாகிறதும் ஒருவன் செய்யப்படுங் காரியங்கள்' நல்லதாகிறதும் இந்த இரண்டு காரியமும் நல்ல இனங்களைச் சேர்ந்தாலல்ல தில்லை யென்றவாறு. மனந்து யனாதலாவது, அறியாமை யாகிற பொல்லாங்கு நீங்கி நல்ல வறிவுகளை யறிகிறது. வினை துாயனாதலாவது, தான் பேசுகிற பேச்சும் செய்யப்பட்ட காரியங்களும் அறிந்து செய்தல். இனந்துாயனாவது, வெகு சினேகிதர் போல நல்ல காரியங்களைச் ச்ெய்விப்பர் போலவே காலம் பார்த்துப் பொல்லாத காரியங்களிலே சேர்த்து விடுகிற தீயினங்களை விட்டு நல்லினங்களையே சேர வேண்டுமென்பதாம். டு 456. மனந்து யார்க் கெச்சநன் றாகு மினந்து யார்க் கில்லைநன் றாக வினை எனபது மனது சுத்தமா யிருந்தப்ேர்களுக்கு அல்லது நல்ல உத்தம குணமான புத் திர ரில்லை; இனந்துாயராயினார்க்கு நன்றாய் முடியாத காரியமு மில்லை யென்றவாறு. ஆகவே நல்லினங்களாற் சேர்ந்தவனுக்கு நல்ல புத்திரரும் நல்ல காரியங்களு முண்டாயிருக்கும்; தீயினங்களைச் சேரவே யிதுக ளொன்று மில்லையென்பதாம். ليfrr 457. மனநல மன்னுயிர்க் காக்கம் இனநல மெல்லாப் புகழுந் தரும் 1. செய்யுங்காரியம் 1. இவைகள்