பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2 33 அவற்றுள் அறத்தாற் றெளிதலாவது புரோகிதனையும் தர்மவான்களையும் அனுப்பி 'இந்த ராசா தர்மவானல்ல: இவனைத் தள்ளிவிட்டுத் தர்மமும் நீதியு முடையானொருத் தனை வைக்கவேணு மென்று நினைத்தோம்; இது எல்லாருக்குஞ் சம்மதம்; உன் புத்தியென்' என்று சொல்லிக் கேட்கிறது. பொருளாற் றெளிதலாவது, சேனாபதியையும் அவனோடி ைசந்த பேரையும் விட்டு அவர்களாலே 'இந்த ராசா மெத்த லோபி: ஒருவருக்கும் ஒரு காசு வீசம் கொடுக்கிறவனல்லன்: இவனைத் தள்ளிவிட்டுக் கொடுக்கிறதும் நீதியுமுடையவன் ஒருவனை ராசபட்டங்கட்ட நினைச்சோம்: இது எல்லோருக்கும நல்லது; உன் புத்தி என்' என்று கேட்கிறது. இன் பத்தாற் தெளிதலாவது, பெரியவராய் வயது சென் றவளாயிருக்கிற வொருத்தியை அனுப்பி " ஒரு பூரீ உன்னைக் கண்டு மோகிச்சு உன்னுடனே கூட வேணுமென்று என்னைத் தாதனுப்பினாள்; அவளைக் கூடினால் உனக்குப் பேரின்பமும பெரும் பொருளும் கைகூடும்' என்று சொல்லு விக்கிறது. பயத்தாற் றெளிதலாவது ஒரு காரியத்தை முன் வைச்சு? ஒரு மந்திரியை அனுப்பி இந்த ராசா நேரம்” சுமத்தி நம்மைக் கொல்ல நினைக்குறான்; அதற்கு முன்னே நாம் எச்சரிக்கைப் பட்டு நமக்கான வனாயொரு ராசாவை வைக்க நினைச் சோம்; இது எல்லார்க்கும் நல்லது; உன்புத்தி என்' என்று கேட்குறது"; இந்த நாலு வகையிலேயும் மனசு பேதியாமலிருந்தால் இனி மேலுங்கேடு நினைக்கிறவனல்ல னென்று தெளிக வென்பதாம் 502. குடிப்பிறந்துங் குற்றத்தி னிங்கி வடுப்பரியும் நானுடையான் கட்டே தெளிவு என்பது 1. கேட்கிறது. 2. நினைத்தோம் 1. மோகித்து 2. வைத்து 3. நேர ம-குற்றம் 4. நினைக்கிறான் 5. நினைத்தோம் 5, கேட்கிறது 7. ' குடிப்பி. ந்து' என்பது பிறர் பாடம்