பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.2 திருக்குறள் காவல் மிகுதியும் வலுமையு மில்லாதவர்களானாலும் அரணாகிய விடத்திலே யிருக்கிறவர்களுடனே சென்று பொரு கிறது அருமை யென்றவாறு. ஆண்மை யுடையவர்களைச் சிறியரென்றெண்ண வேண்டா மென்பதாம். HFF 500. காலாழ் களரி ரிையடுங் கண்ணஞ்சா வேலாண் முகத்த களிறு என்பது பாகனாகிய மாவட்டியற்கு அடங்காததாய் வேலைப்பிடித் திருக்குறவர்களைப் பாய்ந்து கொம்பிலே கோத்துக் கொண் டிருக்கிற யானை, சேற்றுக்குள்ளே யகப்பட்டுக் கால் புதைச்சுக் கொண்டால் அந்தயானையை (நரி) நீரில் கொல்லுமென்றவாறு. ஆண்மையும் பெருமையு முடையவர்களுந் தமக் குப் பொருந்தாத விடத்திலே போனால் தங்கள் பெலம் பிரையோ சனத்துக்கு வாராமல் மிகவும் எளியவர்களால் நலிவுபட்டு அழிவரென்பதாம் ιυ ஆக அதிகாரம் டுல்க்குக் குறள்டுள. இப்பால் 51. தெரிந்து தெளிதல் என்பது, மந்திரிகள் புரோகிதர்கள் சேனாபதிகள் முதலான வர்களுடைய பிறப்புக் குணம் வலி முதலானவைகளையுஞ் செயல்களையு மாராய்ந்து தெளிதல். 5.01. அறம்பொரு எளின்ப முயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் என்பது அரசனாலே தெளியப்படுவானொருவன் தர்மமும் பொருளு மின்பமும் பயமும் என்னும் நான்கு வகையாலவன் மனவியல்பை யாராய்ந்து தெளியப்படுமென்றவாறு. - 1. மாவட்டியன் - மாவுத்தன் - யானைப்பாகன் 2. புதைந்து