பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.2 திருக்குறள் பகையை வைத்துக் கொல்லுகிறவர்களிலும் பொல்லாதவனாம், பொருள் மேலாசை யுடையவனாய்க் குடிகளை வாதை பண்ணி முறைமை யல்லாத காரியங்களைச் செய்யப்பட்ட" Пгтёғгт வென்றவாறு. பகையாளி செய்கிறது ஒரு நாளைத் துன்பம் பொல்லாத ராசா செய்கிறது எப்பொழுதும் துன்பமாகலின், அவனிலும் அரசன் பொல்லாதவ னென்பதாயிற்று. o 55. 552. வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு என்பது வழி போறவர்களை'ப் பறிக்கிறத்துக்கு வேலாயுதம் எடுத் துக் கொண்டு வழியிலே நின்று, வழி போறவர்களை உன் கையிலே யிருக்கிற பொருளைத் தாவென்று சொல்லுதலோ டொக்கும், பொல்லாதவனான ராசா குடிகளைப் பொருள் தாவென்று கேட்கிறது என்றவாறு --- கொடாவிட்டாற் கொல்லுவ னென்பதாயிற்று. 553. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் என்பது தன்னாட்டிலே யுண்டாகிற தீமைகளைத் தினமு மாராய்ந்து, அதற்கே ற்ற முறைமையைச் செய்யாத வரசன், நாள்தோறும் நாட்டையிழந்து போவானென்ற வாறு. இழக்கிறதாவது, பலனில்லாமற் போறதாம்". சிட 554. கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு என்பது 1. செய்யும் 2. போகிறவர்களை 3. பறிக்கிறதற்கு 4. அதற்கேத்த என்று காகிதச் சுவடியிலுள்ளது. 5. போகிறதாம்