பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருக்குறள் ராசாவினுடைய பெலத்தைக் கெடுக்கு மென்றவாறு. அரமானது இரும்பைத் தேய்க்குறாப்போலே கெடுக்கு மென்பதாம். HT 568. இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சி ைத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு என்பது அரசன் ஒரு காரியத்தைச் செய்கிறபோது மந்திரிகளுடனே யுங் தன் சுறறத்தாருடனேயும் ஆலோசனை பண் ணிச் செய்யா மல், தன் கோபத்தினாலேயும் கெறுவத்தினாலேயும்’ எண்ணாமற் செய்தால், அந்தக் காரியந்தப்பிதமாம; அதினாலே அவன் செல்வங் கெடு மென்றவாறு. மூர்க்க புத்தியினாலே தூரம் விசாரியாமற் கெடுவனென்ப தா.ம. அ 569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் என்பது சண்டை வருகிறத்துக்கு முன்னே தனக் கரணாகிய காவலைப் பண்ணிக் கொள்ளாத ராசா, சண்டை வந்தபோது அரணில்லாத படியினாலே பயப்பட்டுச் சீக்கிரத்திலே கெட்டுப் போவா னென்றவாறு. அரணில்லாவிட்டாற் றன்னைச் சேர்ந்தவர்கள் விட்டுப் போவார்கள்; போனாற்றான்றணியனாயிருந்து கெடுவன் என்பதாம், 570. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லது வல்ல தில்லை நிலக்குப் பொறை என்பது கடுங்கோல னான ராசா நீதிநூல் முதலானதுகளைக் கல்லாத பேரைத் தனக்குத் துணையாகக் கூட்டிக் கொள்வன்; 1. தேய்க்றைாற் 2. கர்வத்தினாலேயும் 8. தூரம் என்று காகிதக் சுவடியிலும் அச்சுநூலிலும் உள்ளது. திர என்று இருக்கலாம். 4. வருகிறதற்கு