பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 257 குறைந்து செல்வமும் கொப்பெனக் கெட்டுப்போம்' என்ற en/TT (I)]. அ 565. அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து என்பது தன்னைக் காண வேண்டினவர்களுக்குக் காணக் கிடையாதவ னாய்க் கண்டவர்களுக்குப் பொல்லாத முகத்தையுடையனான ராசாவுடைய பெரிய செல்வம் பேயைக் கண்டாற் பயப்படு மாறு போலக் குற்ற முண்டா மென்றவாறு. இப்படிப்பட்டவனைச் சேர்வாரில்லாத படியினாலே அவன் செல்வம் தனக்கும் பிறர்க்குப பயன் படா தென்பதாம் டு 566. கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வம் நீடின்றி யாங்கே கெடும் என்பது கடிய சொல்லையும் தயை யில்லாமையையும் உடையவன் செல்வம், நெடுநாள் நில்லாமல் அப்பொழுதே கெட்டுப்போ மென்றவாறு. நெடுஞ் செல்வமாகியது, அநேக நாளே தொட்டு வர்த்திச்சு’ வருகிற செல்வம்; அது இவன் பொல்லாமையாலே கடுகக் கெட்டுப்போ மென்றவாறு சி 567. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் டேய்க்கு மரம் என்பது கடினமான வார்த்தையும் குற்ற மிகுத்த தெண்டமும் 1. கெடப்போ' என்று காகிதச்சுவடியிலுள்ளது: இழக்கும் எனபது அச்சு நூல். 1. வாத்தித்து - இருக்கிற 3. முகுற்ற என்று சுவடியிலுள்ளது. குற்றத்தின் மிக்க என்பது அச்சு நூ ઢં