பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 திருக்குறள் 562. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் என்பது குற்றத்துக்குத் தக்க தெண்டனை பண்ணத் துடங்கிற போது வெகுவாய்த் தெண்டனை பண்ணப் போறாப்” போலே கோபிச்சுக் கொண்டு, தெண்டிக்கிறபோது பிரமாணம் தப்பா மல் செய்க, செல்வம் தன்னை விட்டு நீங்காமல் நிற்க வேண் டினவர் என்றவாறு. வெகுவாகத் தெண்டனை பண்ணப் போறாப் போலே கோபிச்சுக் கொள்ளுகிறது. குற்றஞ் செய்கிறவர்கள் பயப்பட வேண்டி : மட்டாகத் தெண்டிக்கிறது, எவர்களும் பயப்படாத படிக்கு. PD_ 563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்த மொல்லைக் கெடும் என்பது குடிகள் பயப்பட்டு நடுங்கத் தக்க செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோல னான ராசா சீக்கிரத்தில் கெட்டுப்போவா னென்றவாறு. பொல்லாங்கு செய்தவர்கள் கொப்பெனக்" கெட்டுப் போவார்களென்பதாம். HL. 564 இறைகடிய னென்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும் என்பது குடிகளாலே தம்முடைய ராசா பொல்லாதவ னென்று சொல்லப்படுகின்ற வார்த்தையை யுடைய ராசா ஆயுசுங் 1. தொடங்குகிற 2. போகி றாற் 3. கோபித்து 4. அளவுகடவாமல் க. ாையின் 6. விரைவில் 7. "இல்லாச்சொல்' என்று காகிதச் சுவடியி லுள்ளது 8. நம் என்பது அச்சு நால்