பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருக்குறள் உலகவியற்கையாவது, பெரியோர்கள் சொன்ன முறைமை தப்பாமல் நடக்கிறது. ஒருவர் செய்த குற்றங்களைக் பொறுக் கிறது முதலானது. இவை செய்யாத மனுஷர் தமக்கும் பிறர்க் கும் பயன்படாரென்பதாம். 573. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண் என்பது ராகம் பாடுகிறவன் பாடுகிறத்தினுடைய லட்சணங்களை யறியாவிட்டா லந்த ராக’மென்ன பலனுண்டாம்; அதுபோலக் கண்ணோட்ட மில்லாத கண்களென்னபயனைச் செய்யு மென்ற வாறு பாடுகிற லட்சணமாவது: யாழ்குழலாகியதும், நெஞ்சினுள் ளாகிய மிடற்றிலே எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பித்தல் குடில மென வைந்தும், பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு வண்ண மென்னும் வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இதுகளோடு’ கூடாத ராகத்தினாலே பலனில்லாதது போலக் கண்ணோட்ட மாகிய தயையோடு கூடாவிட்டாற் கண்ணாலே பலனில்லை யென்பதாம். கூ 574. உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற் கண்ணோட்ட மில்லாத கண் என்பது கண்டவர்களுக்கு முகத்திலே கண்கள் இருக்குறாப்போலே" காண்பிக்கிற தல்லாமல் வேறொன்று மில்லை, அளவில்லாத கண்ணோட்டமில்லாத கண்கள் ஒருபலனையுஞ் செய்யமாட்டா வென்றவாறு. تیم 575. கண்ணுக் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்னென் றுணரப் படும் என்பது 1. பாடுகின்றதின் 2. ராகத்தால் 3. பிற்குறிப்புக்சாண்க 4. இவை களோடு 5. இருக்கிறாற்போலே