பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 0 திருக்குறள் வந்த போதும் அதனை யனுபவித்து மனத்தால் வருந்தா னென்றவாறு ன்பத்தை விரும்பாத படியினாலே துன்பத்தை யனுபவித் ரு தாலும் துக்கப்படா னென்பதாம். அரு 630. இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு என்பது ஒருவன் காரியஞ் செய்யுமிடத்து முயற்சியான் வந்த துன்பம் தன்னையே தனக்கின்பமாகக் கற்பித்துக் கொள்ளுவனா யின் அதனாற் றன்.பகைவர் தன்னை யெண்ணத் தக்க வுயர்ச்சி யுண்டா மென்றவாறு. துன்பத்தை யின்பமாகக் கொண்டால் தொடங்கிய காரிய முடிப்ப னென்று பகைவரஞ்சுவ ரென்பதாம். α) ஆக அதிகாரம் சுலங் க்குக் குறள் களங்ல் அரசியல் முற்றும் இப்பால் அமைச்சியல் 64. அமைச்சு என்பது அரசியல் நடத்தற் கேதுவாகிய அங்கங்களின் இயல்பு முப்பத்திரண்டு அதிகாரத்தாற் கூறுவான் றொடங்கி முதற்கண் அமைச்சன தியல்பு பத்ததிகாரத்தாற் கூறுகின்றார். முதற்கண் அமைச்சுக் கூறுகின்றார். அஃதாவது மந்திரியுடைய குணலக்ஷணங்களைச் சொல்லுகிறது. 631. கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு மருவினையு மாண்ட தமைச்சு என்பது காரியம் செய்யுமிடத்து அதற்கு வேண்டின ஆயுதங்களும் அதற்கேற்ற காலங்களும், அந்தக் காரியஞ் செய்கிற போது 1. கொள்ளுவனாகி என்று காகிதச்சுவடியிலுள்ளது 2. முப்பத்திரெண்டு என்று காகிதச் சுவடியிலுள்ளது