பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3. I 5 730. உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச் சொல்லா தார். என்பது தான் கற்ற கல்வியைச் சபையிலே சொல்ல மாட்டாதவர்கள், பிராணனுடனே யிருந்தாலும் செத்தாரோ டொப்ப ரென்ற வாறு கற்ற கல்வி பிரகாச மில்லாத படியினாலே யிறந்தா ரென்ப தாம். 0 அமைச்சியன் முற்றும் ஆக அதிகாரம் எல்கூக்குக் குறள் எளங் ) இப்பால் அங்கவியல் 74 நாடு என்பது, ராசாக்க ளாலேயும், மந்திரிகளாலேயும் காக்கப்பட்ட நாட்டி னுடைய லட்சணத்தைச் சொல்லுகிறதென்றவாறு. 731. தள்ளா வினையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு என்பது எந்நாளும் நல்ல பயிர்களை யிடுகிறவர்களும், பெரியோர்களும், கெடாத செய்வ முடையவர்களும் இருக்கிறதே நாடென்றவாறு. நல்ல பயிர்களாவது, அறு சுவை யுண்டாக்குபவை; பெரி யோர்கள் நீதி மார்க்கம் தப்பாமல் நடக்கிறவர்கள் கெடாத செல்வராவது, சத்தியத்துடனே தேடின திரவிய முடையவர்: இவர்களுண்டாகவே அரசனுக்கும் மற்று முண்டான பேர்க்குஞ் செல்வங் குறைபடாதென்பதாம். தி 1. செத்தாரோ தானா என்பது காகிதச் சுவடி