பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3 6. I கன்னொடு கூடாமை :1யைக் கருதி ஒருவன் ஒருவனுக்குப் பொல்லாங்கு செய்தாலும், அவனுடனே பகை பண்ணிக் கொண்டு திரும்பி அவனுக்குப் பொல்லாங்கு செய்யாமல் இருக்1* கிறதே நல்லதென்றவாறு. இவனும் பொல்லாங்கு செய்தால் பகைவளர்ந்து இரண்டு பேரும் கெடுவர் என்பதாம். 보_ 853 இகலென்னு மெல்வநோய் நீக்கிற் றவலில்லாத் தாவில் விளக்கந் தரும் என்பது பகையென்று சொல்லப்பட்ட துக்கத்தைச் செய்கிற வியா தியை யொருவன் தன் மனதிலே யிருக்கவொட் டாமல் நீக்கி விட்டால், அது அவனுக்கு எந்நாளும் அழியாத புகழைக் கொடுக்கு மென்றவாறு. பகை மனத்தே யில்லாவிட்டால் எல்லாரும் உறவா வர் : அதனால் நினைத்த கருமம் எல்லாமுடியு மென்பது. sh 854. இன்பத்து ளின்பம் பயக்கும் இகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின் என்பது பகையென்று சொல்லப்படுகின்ற துன்பம் எல்லாத்துன்பங் களிலும் அதிகமாம்; அந்தப் பகையில்லாதவனுக்கு அவ்வின் மை” இன்பத்துக்கெல்லா மதிகமான வின்பத்தைத் தருமென்றவாறு. துக்கத் தி லுந் துக்கமாகிறது. எல்லாருடனேயும் பகைச்சுக் கொண்டு தன் பெலன்' போகிறது. இன்பத்துளின்பமாவது, எல்லாருஞ் சினேகமானால் வேண்டியதெல்லாமெய்துவது மென் பதாம்.

  • முதல் * வரையுள்ள உரை அச்சுநூல் 1. சொல்லப்படும் 2. இங்கு அவ்வின்மை’ என்பது அச்சுநூல் 3 . இது அசுச்நூலில் இல்லை'

டி. பகைத்துக் 5 பலம்