பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 திருக்குறள் மலைக்குச் சமானமான அருந்தவர், ஒருவன் செய்த குற்றத்தி னாலே, அவனைக் கெட நினைத்தாராகில், நிலையா யிருக்கப் பட்ட செல்வங்களும் அவனுங் கூடக் கெடுவரென்றவாறு." வெய்யிலும் மழையுங் காற்றும் பொறுத்து மலை போலே சரியாமல் நிற்கப்பட்ட அருந்தவர் கோபித்தால் வெகு பொரு ளைத் தேடி வைத்துக் கொண்டு நமக்கழிவில்லை யென்கிறவர் களும் கொப்பெனக் கெடுவர்களென்பதாம். الٹی( 899, ஏந்திய கொள்கையார் சிறி ணிடைமுரிந்து வேந்தனும் வெந்து கெடும் என்பது காக்கிறத்துக்கு" அரிதாகிய பெரிய விரதங்களுடையார் கோபிச் சால்' அவர்கள் பெருமையினாலே இந்திரனானாலும் தன் பதிப் யிழந்து கெட்டுப் போவார்களென்றவாறு. மகா விரதம் உடைய வர்கள் கோபிச்சால் " எப்படிப்பட்ட செல்வரு மழிந்து போவரென்பதாம். for, 900. இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் சிறந்தமைந்த சீரார் செறின் என்பது நல்ல தவசையும் பொறுமையையு முடைய அருந்தவர் கோபித் தால் மாளவரப்பட்ட செல்வங்களை யுடையவர்களானாலும் தப்பிப்பிழைக்க மாட்டார்கள் என்றவாறு.

  • மாளி வரப்பட்ட செல்வமாவது, வெள்ளாண்மை வியாபாரங்களால் வரப்பட்ட செல்வம் நல்ல வழியே வந்த
  • முதல் * வரை: நிலைபெற்றாற் போலுஞ் செல்வர் தம் குடியோடும்

மாய்வர் - அச்சு நூல் 1, கோபிற்றால் என்பது காகிதச் சுவடி. 2. வேந்து என்பது சரியான பாடம் 3. காக்கிறதற்கு 4. கோபித்தால் 5 பதவி. 6. கோபித்தால் 7. மிகப் பெரியசார்பினை - அச்சு நூல் f முதல் f வரை சார்பு- அரண் படை பொருள் நட்பு என்பவை சீர்-தவம்-அச்சுநூல் பரிமேலழகருரை